Friday, September 6, 2013

        தமிழ் மக்களின் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளையும் நம்மில் பெரும்பாலோர்  அறிவர்.
       முருகப்  பெருமான் வள்ளியை மணமுடித்த கதையையும் அறிவர். ஆனால்,  வள்ளியை முருகன் மணமுடித்த தலமான வள்ளிமலை யை  பலர் அறியார்.
     
சிறப்பு மிகு இத்தலம் வேலூர் நகரிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆற்காட் டிலிருந்தும் காட்பாடியிலிருந்தும் அரக்கோணம் சோளிங்கரிளிருந்தும்,பேருந்து வசதிகள் உள்ளது.

      பக்தர்களுக்கு மதியம் திருக்கோயிலில் சுவையான அன்னதான உணவும் வழங்கப்படுகிறது.

       அழகுமிகு இத்தலத்திற்கு திருமணமாகதவர்கள் பிரார்த்தனைக்காக வருவது விசேஷம்.

       ஆடி கிருத்திகை,வைகாசி விசாகம்,தமிழ் வருட பிறப்பு,உகாதி,நாட்களில் பல ஆயிரக்கணக்கானோர் வருவதும்,தமது பிரார்த்தனைக்காக காவடியுடன் வருவதை பார்க்க கண் கோடி வேண்டும்.

       பச்சை மலையின் நடுவே நெடிய படிகட்டுக்கள் மலைப்புடன் மகிழ்ச்சியை தருகின்றன.குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு குரங்குகளின் ஆட்டங்கள்.

      சமிபத்தில் அங்கு சென்றிந்தேன்.பசுமைமிகு வள்ளிமலையில் உள்ள ஜைனர் குகை கல்வெட்டுகள் ,புடைப்பு  சிற்ப்பங்கள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம். 
    வள்ளிமலை , சில ஒளிப்படங்கள் உங்களுக்காக....
முடிந்தவர்கள் ஒரு முறை சென்று வரலாம்.
அழகிய திருக்குளம் 

மா பெரும் திருக்குளம் 

விரும்பிய கணவனை அடைய அருளும் ஸ்ரீ வள்ளி சன்னதி 



                                                             ஸ்ரீ வள்ளி சன்னதி 
பசுமைமிகு மலைப் படிகட்டுகள் 

 
பசுமைமிகு மலைப் படிகட்டுகள்( மற்றொரு கோணத்தில் )

                                    பசுமைமிகு மலைப் படிகட்டுகள்( மற்றொரு கோணத்தில் )


சொந்த வீடு வேண்டி  
குகைக்கோயில் 


                               பசுமைமிகு மலைப் படிகட்டுகள்( மற்றொரு கோணத்தில் )
                                                  குகைக்கோயில் நுழைவு வாயில் 
                                              திருமணம்,குழந்தைப்பேறு வேண்டி 
                                                               கொடிமரம்
                                                              மலை  சுனை
                                                      சமணர் மண்டபம்
                                                      மலையில் இருந்து
                                                   மலையில் இருந்து
                                                      மலையில் இருந்து
                                           பழமையை கூறும் படிககட்டுகள்
                                                 பழமையை கூறும் படிககட்டுகள்
                                                 சமணர் (ஜைனர் ) குகை
                                                            சமண சிற்பங்கள்
                                                     தீர்தங்கரர் சிற்பங்கள்  
கல்வெட்டுகள் 

                                          தொல்பொருள் துறை  தகவல் கல்வெட்டு
அழகான சிறு வண்டு